ஹாரிஸ் ஜெயராஜ் – சித் ஸ்ரீராம் கூட்டணியில் உருவான முதல் பாடல் | The first song created by the Harris Jayaraj

சென்னை,
மின்னலே படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜ் தமிழ்த் திரையிசை உலகையே பெரும் வியப்பில் ஆழ்த்தினார். கமல், விஜய், அஜித், சூர்யா என பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார். இவர் தற்போது ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ என்ற படத்திற்கு இசையமைக்கிறார்.
இயக்குனர் விஜய் இயக்கும் இந்த படத்தில் மதுமகேஷ், அர்ஜுன் அசோகன், ஜியா சங்கர், எம் எஸ் பாஸ்கர், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டி ஸ்டூடியோஸ் – டென்வி புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்த நிலையில், இப்படத்திற்காக முதல் முறையாக ஹாரிஸ் ஜெயராஜ் – சித் ஸ்ரீராம் கூட்டணி இணைந்துள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் சித் ஸ்ரீராம் பாடியுள்ள உன்னை நினைத்து என்ற பாடல் இன்று மாலை 6 மணியளவில் வெளியாக உள்ளது. இவர்களது கூட்டணியில் உருவான முதல் பாடல் என்பதால், ரசிகர்கள் ஆவலுடன் பாடலை எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர்.






