''ஹாரிபைடு'' – ஹாலிவுட் ஹாரர் படத்தில் இணைந்த நட்சத்திரங்கள்

வாஷிங்டன்,
டெக்ஸ்டரில் நடித்ததற்காக அறியப்பட்ட நடிகை ஜூலி பென்ஸ், ஹாரர் காமெடி திரைப்படமான ”ஹாரிபைடு”ல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், பிஸி பிலிப்ஸ், ரான் பெர்ல்மேன் மற்றும் ஜிம் ராஷ் ஆகியோரும் இத்திரைப்படத்தில் நடிக்கிறார்கள்.
எழுத்தாளர் மைக்கேல் ஜாரா இப்படத்தை இயக்குகிறார். இவர் இயக்கும் முதல் படம் இதுவாகும். விரைவில் இப்படம் திரைக்கு வர உள்ளது
மேரி மெக்டோனல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ”மேஜர் க்ரைம்ஸ்” என்ற தொலைக்காட்சி தொடரின் மூன்று சீசன்களை எழுதி மைக்கேல் ஜாரா பிரபலமானார். .