”ஹாய் நான்னா” இயக்குனருடன் மீண்டும் இணைகிறாரா நானி ?|Nani to reunite with Hi Nanna director Shouryuv for pan-India rom-com

”ஹாய் நான்னா” இயக்குனருடன் மீண்டும் இணைகிறாரா நானி ?|Nani to reunite with Hi Nanna director Shouryuv for pan-India rom-com


சென்னை,

”ஹிட் 3” படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின்பு நடிகர் நானி இயக்குனர் ஷௌரியுவுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ‘ஹாய் நன்னா’ படத்திற்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றும் படமாக இது அமைய உள்ளது.

இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றாலும், இந்த படம் ஒரு பான்-இந்தியா படமாக இருக்கும் என்றும், அடுத்த ஆண்டு துவக்கத்தில் படப்பிடிப்பு துவங்கும் என்றும் தெரிகிறது.

சில நாட்களுக்கு முன்பு ஷௌரியுவ், நானியை சந்தித்து ஒரு காதல் காமெடி படத்தை பற்றி பேசியதாகவும் , அந்த கதை நானிக்கு பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமீபகாலமாக அதிரடி படங்களில் நடித்து வரும் நானிக்கு இந்த படம் ஒரு மாற்றத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, நானி ‘தி பாரடைஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் திரைக்கு வருகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *