ஹாட்ரிக் தோல்வியை தவிர்பாரா வைஷ்ணவி சைதன்யா?

சென்னை,
கடந்த 2023- ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படங்களில் ஒன்று பேபி. விஜய் தேவரகொண்டாவின் சகோதரர் ஆனந்த் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தில் தனது நடிப்பால் பலரது இதயங்களை வென்றார் வைஷ்ணவி சைதன்யா.
அதன் பிறகு, அவர் ‘ஜாக்’ மற்றும் ‘லவ் மீ’ ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே பெரிய தோல்வியை சந்தித்தன. ‘லவ் மீ’யை விட, ‘ஜாக்’ படத்தில் தனது கதாபாத்திரத்திற்காக வைஷ்ணவி விமர்சனங்களுக்குள்ளானார்.
இந்நிலையில், அனைவரின் பார்வையும் அவரது அடுத்த படத்தின் மீது திரும்பி இருக்கிறது. அதன்படி, அவர் தனது அடுத்த படத்தில் ஆனந்த் தேவரகொண்டாவுடன் மீண்டும் இணைந்துள்ளார். அப்படத்தை நாக வம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
தயாரிப்பாளர் நாக வம்சி தனது வாழ்க்கையில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருவதால் இந்த படமும் வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், வைஷ்ணவி ஹாட்ரிக் தோல்வியை பெறுவாரா? அல்லது வெற்றிப்பாதைக்கு திரும்புவாரா? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.