ஹனிமூன் செல்வதில் தகராறு – மருமகன் மீது ஆசிட் வீசிய மாமனார்

ஹனிமூன் செல்வதில் தகராறு – மருமகன் மீது ஆசிட் வீசிய மாமனார்


ஹனிமூனுக்கு எங்கு செல்வது என ஏற்பட்ட தகராறில் மருமகன் மீது மாமனார் ஆசிட் வீசியுள்ளார்.



ஹனிமூன்


மகாராஷ்டிரா மாநிலம் தானேவை சேர்ந்த 28 வயதான இபாத் அடிக் பால்கே என்பவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. 

kashmir honeymoon son in law acid



இவர் தனது மனைவியை தேனிலவுக்கு காஷ்மீர் அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளார். ஆனால் காஷ்மீர் செல்ல அவரின் மாமனார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 



ஆசிட் வீச்சு



65 வயதான அவரது மாமனார் ஜக்கி குலாம் முர்தாசா கோட்டல், வெளிநாட்டில் உள்ள புனித மத ஸ்தலத்திற்கு சென்று வருமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

son in law acid honeymoon destination dispute

இந்நிலையில் நேற்று(18.12.2024) பால்கே வெளியே சென்று வீடு திரும்பிய போது சாலையில் காரில் அவருக்காகக் காத்திருந்த கோட்டல், பால்கேவை நோக்கி வந்து அவர் மீது ஆசிட் வீசிவிட்டு தப்பியோடியுள்ளார்.

இதில், அவரது முகம் மற்றும் உடலில் காயம் ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக கோட்டல் மீது வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.    


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *