ஸ்ரீலீலாவுக்கு சிறப்பு பரிசளித்த சிரஞ்சீவி – வைரலாகும் புகைப்படம்|Chiranjeevi surprises Sreeleela with a special Women’s Day gift

ஸ்ரீலீலாவுக்கு சிறப்பு பரிசளித்த சிரஞ்சீவி – வைரலாகும் புகைப்படம்|Chiranjeevi surprises Sreeleela with a special Women’s Day gift


ஐதராபாத்,

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி. இவர் இதுவரை 150 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இவர் தற்போது ‘விஸ்வம்பரா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை மல்லிடி வசிஷ்டா இயக்குகிறார். 18 வருட இடைவெளிக்கு பிறகு திரிஷா சிரஞ்சீவியுடன் இணைந்து இப்படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.

இந்நிலையில், நடிகர் சிரஞ்சீவி கடந்த மகளிர் தினத்தை முன்னிட்டு நடிகை ஸ்ரீலீலாவுக்கு சிறப்பு பரிசு ஒன்றை வழங்கி இருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களை ஸ்ரீலீலா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருக்கிறார். தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

ஸ்ரீலீலா தற்போது நடித்து முடித்துள்ள படம் ராபின்ஹுட். நிதின் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படம் வருகிற 28-ம் தேதி வெளியாக உள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *