ஸ்ரீலீலாவின் “மாஸ் ஜாதரா” பட ரிலீஸ் தேதி அறிவிப்பு|‘Mass Jathara’ sets its date for Ganesh festival

சென்னை,
ஸ்ரீலீலா நடித்துள்ள “மாஸ் ஜாதரா” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 27-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்தப் படம் முதலில் மே மாதம் திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால் தயாரிப்பில் ஏற்பட்ட தாமதங்கள் மற்றும் சில பெரிய படங்கள் வெளியாகவிருந்ததால் ரிலீஸ் தள்ளிப்போனது.
நாக வம்சி மற்றும் சாய் சவுஜன்யா ஆகியோர் தயாரிக்க அறிமுக இயக்குனர் பானு போகவரபு இப்படத்தை இயக்குகிறார். இதில் ரவி தேஜா கதாநாயகனாக நடிக்கிறார். ‘தமாகா’ படத்திற்கு பிறகு மீண்டும் ரவி தேஜா – ஸ்ரீலீலா இணைந்து இப்படத்தில் நடிக்கின்றனர்.