ஸ்ரீதேவியின் மகள் என்பதால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?”- பவித்ரா மேனன் கண்டனம் | “Can I do whatever I want because I’m Sridevi’s daughter?

கொச்சி,
துஷார் ஜலோடா இயக்கத்தில் சித்தார்த் மல்கோத்ரா ஜான்வி கபூர் ஆகியோர் நடித்துள்ள ‘பரம் சுந்தரி’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் கேரளாவைச் சேர்ந்த பெண்ணாக ஜான்வி கபூர் நடித்துள்ளார். படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.
இதில் ஜான்வி கபூரின் மலையாள உச்சரிப்புக்கு நடிகை பவித்ரா மேனன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நடிகை பவித்ரா மேனன் கூறும்போது, “ஜான்வி கபூர் பேசும் மலையாள உச்சரிப்பில் பிழை இருக்கிறது. மலையாளத்தைச் சேர்ந்த பெண்களை நடிக்க வைப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? நாங்கள் திறமை குறைந்தவர்களா?.
கேரளாவில் எந்த பெண்ணும் இப்படி பேச மாட்டார்கள்? நான் மலையாள நடிகை என்றாலும் இந்தியில் சரளமாக பேசுவேன். இந்த கதாபாத்திரத்திற்கு ஒரு மலையாள பெண்ணை கண்டுபிடிப்பது அவ்வளவு சிரமமா? மலையாள நடிகைகளை தவறாக காட்டுவதே பாலிவுட் சினிமாவின் வேலையாகி போய்விட்டது.
நாங்கள் சாதாரணமானவர்கள் என்றாலும் திறமை மிக்கவர்கள். நாங்கள் எங்கும் சென்று மல்லிகைப்பூ அணிந்து மோகினி ஆட்டம் ஆடுவதில்லை. ஸ்ரீதேவியின் மகள் என்பதால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?”, என்று கேள்வி எழுப்பி உள்ளார். இந்த விவகாரத்தில் ஜான்வி கபூர் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.