ஸ்மிருதி இரானி நடிக்கும் சீரியலில் சிறப்பு தோற்றத்தில் பில்கேட்ஸ், Bill Gates to make a special appearance in the serial starring Smriti Irani,

ஸ்மிருதி இரானி நடிக்கும் சீரியலில் சிறப்பு தோற்றத்தில் பில்கேட்ஸ், Bill Gates to make a special appearance in the serial starring Smriti Irani,


புதுடெல்லி,

அமெரிக்காவை சேர்ந்த பிரபல பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரேசாப்டின் இணை நிறுவனர், பில்கேட்ஸ். அத்துடன் அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு பணிகளில் மிகுந்த பரபரப்பாக இயங்கிக்கொண்டிருப்பவர். இந்த பணி நெருக்கடிக்கு மத்தியிலும் இந்தியாவின் பிரபல இந்தி டி.வி. தொடரில் முதல் முறையாக சிறப்பு தோற்றத்தில் பில்கேட்ஸ் நடிக்கிறார்.

முன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவருமான ஸ்மிருதி இரானி நடித்து வரும் ‘கியுங்கி சாஸ் பி கபி பஹு தி 2′ என்ற தொலைக்காட்சி தொடரில் பில்கேட்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த தொடருக்கான முன்னோட்டம் சமீபத்தில் வெளியானது. அதில் அந்த தொடரில் நடித்து வரும் ஸ்மிருதி இரானி, யாரோ ஒருவருடன் வீடியோ காலில் பேசுகிறார். அதில், ‘ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா’ என தொடங்கும் ஸ்மிருதி இரானி, ‘நீங்கள் அமெரிக்காவில் இருந்து நேரடியாக என் குடும்பத்துடன் இணைவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் உங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்’ என கூறுகிறார்.

அவருடன் எதிர்முனையில் பேசியது பில்கேட்ஸ்தான் என பின்னர் ஸ்மிருதி இரானி உறுதிப்படுத்தினார். இது வரலாற்று சிறப்புமிக்க தருணம் என்றும் அவர் கூறினார். முன்னதாக அமெரிக்காவின் பிரபல டி.வி. தொடரான ‘தி பிக் பேங்க் தியரி’ என்ற நிகழ்ச்சியிலும் பில்கேட்ஸ் தலைகாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *