''ஸ்பைடர் மேன்'' பட நடிகர் ஜாக் பெட்ஸ் காலமானார்

சென்னை,
”ஸ்பாகெட்டி வெஸ்டர்ன்ஸ்” படத்தில் நடித்ததற்காகவும், சாம் ரைமியின் ‘ஸ்பைடர் மேன்’ (2002) படத்தில் ஹென்றி பால்கனாக நடித்ததற்காகவும் மிகவும் பிரபலமான ஜாக் பெட்ஸ் காலமானார்.
அவருக்கு வயது 96. பெட்ஸின் மருமகனும் நடிகருமான டீன் சல்லிவன் வியாழக்கிழமை கலிபோர்னியாவின் லாஸ் ஓசோஸில் உள்ள வீட்டில் காலமானதாக தெரிவித்திருக்கிறார்.
”தி ப்ளடி ப்ரூட்” (1959) என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஜாக் பெட்ஸ். சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இருந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த ஜாக் பெட்ஸின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.