''ஸ்பிரிட்'' நடிகையின் 'தடக் 2' டிரெய்லர் வெளியீடு…படம் திரைக்கு வருவது எப்போது?

''ஸ்பிரிட்'' நடிகையின் 'தடக் 2'  டிரெய்லர் வெளியீடு…படம் திரைக்கு வருவது எப்போது?


சென்னை,

கரண் ஜோகர் தயாரிப்பில் ஷாஜியா இக்பால் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தடக் 2. இப்படம் கடந்த 2018-ம் ஆண்டு தமிழில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் ரீமேக் ஆகும். இதன் முதல் பாகம் ‘சாய்ராத்’ என்ற படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில், இந்தப் படம் கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகவிருந்தது, ஆனால் சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி வெளியாகிறது.

இப்படத்தில் சமீபத்தில் பிரபாஸின் ”ஸ்பிரிட்” படத்தில் இணைந்த திரிப்தி டிம்ரி கதாநாயகியாகவும் சித்தார்த் சதுர்வேதி கதாநாயகனாகவும் நடிக்கின்றனர். இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *