''ஸ்பிரிட்'' – இணையும் தமிழ் நட்சத்திரம் – வங்காவை கவர்ந்த அந்த நடிகர் யார்?

சென்னை,
பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் தமிழ் நடிகர் ஒருவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்காவின் அடுத்த பெரிய முயற்சியாக ”ஸ்பிரிட்” உருவாகி வருகிறது. இதில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். திரிப்தி டிம்ரி கதாநாயகியாக நடிக்கிறார்.
படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வரும்நிலையில், படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகமா இருக்கிறது.
இந்நிலையில், சமீபத்திய தகவலின்படி ஸ்பிரிட்டில் ஒரு சிறப்பு கதாபாத்திரம் உள்ளதாகவும் அதில் ஒரு தமிழ் ஹீரோவை நடிக்க வைக்க வங்கா திட்டமிட்டுள்ளதாகவும் பேச்சு வெளியாகி உள்ளது. இருப்பினும், அந்த தமிழ் ஹீரோ யார் என்பது மர்மமாக இருக்கிறது.
அப்படி ஒரு கதாபாத்திரம் இருப்பின், அந்த வேடத்தில் யார் நடிக்க உள்ளார், வங்காவை கவரந்த அந்த தமிழ் நட்சத்திரம் யார் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.