ஷாலினி பாண்டேவின் ’ராகு கேது’ – புதிய பாடல் வெளியீடு

சென்னை,
அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷாலினி பாண்டே. தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் நடித்து வரும் அவர் சமீபத்தில் வெளியான தனுஷின் இட்லி கடை படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தற்போது நெட்பிளிக்ஸில் ஸ்டிரீமிங் ஆகிறது.
தற்போது ஷாலினி பண்டே, ராகு கேது என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருடன் புல்கித் சாம்ராட், வருண் சர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விபுல் விக் இயக்கியுள்ள இப்படம் ஜனவரி 16-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், இப்படத்திலிருந்து ’கிஸ்மத் கிசாபி’ என்ற பாடல் வெளியாகி உள்ளது. தற்போது இப்பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.






