வைரலாகும் ஸ்ரீலீலாவின் லுக் டெஸ்ட் புகைப்படங்கள்!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஸ்ரீலீலா. இவர் 2019-ம் ஆண்டு வெளியான ‘கிஸ்’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் 100 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றியை அளித்தது. இதையடுத்து அவருக்கு கன்னடத்தில் வாய்ப்புகள் குவிந்தன. இவர் தற்போது பவன்கல்யாண், நந்தமுரி பால கிருஷ்ணா, விஜய் தேவரகொண்டா ஆகியோர் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் ,’குர்ச்சி மாடதபெட்டி’, ‘கிஸ்சிக்’ ஆகிய பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களைக் கிறங்கடித்தார்.
இவர் கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாக புதிய இந்தி படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார். அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகை ஸ்ரீலீலா இன்று தனது 24-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், பாரசக்தி பட இயக்குனர் சுதா கொங்கரா ஸ்ரீலீலாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், பாரசக்தி படத்திற்கான ஸ்ரீலீலாவின் லுக் டெஸ்ட் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.