வைரலாகும் ‘விடாமுயற்சி’ படத்தின் புதிய போஸ்டர்

சென்னை,
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துள்ளார். மகிழ் திருமேனி இயக்கிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
விடாமுயற்சி திரைப்படம் பிரேக்டவுன் என்கிற ஹாலிவுட் படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. இப்படத்திற்கு அஜித் ரூ. 105 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கே ரிலீஸ் ஆக இருந்த இப்படம் சில காரணங்களால் வெளியாகவில்லை. பின்னர் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி படம் நாளை 1,000-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் படக்குழு இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அஜித் மற்றும் அர்ஜுன் நேருக்கு நேர் மோதிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.