வைரலாகும் பிரித்விராஜின் ’கலீபா’ கிளிம்ப்ஸ்

சென்னை,
வைஷாக் இயக்கத்தில், ஜினு ஆபிரகாம் தயாரிப்பில், பிரித்விராஜ் சுகுமாரன் நடிக்கும் புதிய மலையாளப் படமான கலீபாவின் கிளிம்ப்ஸ் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ’தி பிளட் லைன்’ என்ற தலைப்பில் வெளியாகி யூடியூப்பில் 5 மில்லியனைத் தாண்டி உள்ளது.
கலீபா படம் அடுத்த ஆண்டு ஓணம் அன்று பெரிய அளவில் வெளியாக உள்ளது. போக்கிரி ராஜா படத்தின் வெற்றிக்கு பின் பிரித்விராஜும் வைஷாக்கும் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார்கள்.
இதுமட்டுமில்லாமல், பிரித்விராஜ், எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் பான் இந்திய படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் டைட்டில் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.