வைரலாகும் நடிகர் சூரியின் எக்ஸ் பதிவு

சென்னை,
தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து தற்போது கதாநாயகனாக உயர்ந்துள்ளவர் நடிகர் சூரி. இவரது நடிப்பில் கடந்த 16-ந் தேதி ‘மாமன்’ படம் வெளியானது. பிரசாந்த் பண்டிராஜ் இயக்கிய இப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. இதில் ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ராஜ்கிரண், பாபா பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் இதுவரை ரூ.45 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
இதனையடுத்து, மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்போ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘மண்டாடி’ என பெயரிடப்பட்டுள்ளது. மகிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் நடிகர் சுஹால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில், நடிகர் சூரி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, தனது அடுத்த படமான ‘மண்டாடி’ படத்தில் கவனம் செலுத்த உள்ளதாக பதிவிட்டுள்ளர்.