வைரலாகும் நடிகர் சிபி சத்யராஜின் இன்ஸ்டா ஸ்டோரி

சென்னை,
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிபி சத்யராஜ். இவரது நடிப்பில் வெளியான ‘வட்டம், மாயோன், கபடதாரி, வால்ட்டர்’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அதனை தொடர்ந்து இவர் தற்போது ஆக்சன் கலந்த கிரைம் திரில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இளையராஜா கலியபெருமாள் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு “டென் ஹவர்ஸ்” என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் சிபி சத்யராஜின் இன்ஸ்டா ஸ்டோரி இணையத்தில் வைரலாகி வருகிறது. காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் பகுதியில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 900 நாட்களுக்கும் மேலாக ஏகானாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழலில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், தனது கட்சியின் முதல் மாநாட்டில் பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, விவசாய நிலங்களை கையகப்படுத்த கூடாது என தீர்மானமும் நிறைவேற்றி இருந்தார். இதனையடுத்து, பரந்தூர் கிராம மக்களை தமிழக டி.ஜி.பி. மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் அனுமதியோடு நேற்று விஜய் சந்தித்தித்து பேசினார்.
இது தொடர்பான புகைப்படத்தை நடிகர் சிபி சத்யராஜ் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்து கூத்தாடி என்று பதிவிட்டுள்ளார்.