வைரலாகும் ‘கேடி – தி டெவில்’ படத்தின் ’அண்ணன்மாரோ’ பாடல்|Kaalainga Poal Annanmaaroa Lyrical Video out now

சென்னை,
‘ஆக்சன் கிங்’ அர்ஜுனின் சகோதரி மகனான துருவா சர்ஜா நடித்துள்ள ‘கேடி – தி டெவில்’ படத்திலிருந்து ’காளைங்கபோல் அண்ணன்மாரோ’ பாடல் வெளியாகி உள்ளது.
தொடக்கத்தில் காதல் கதைகளில் நடித்து வந்த துருவா சர்ஜா, அதிரடி ஆக்சன் வேடங்களில் திறமையைக் காட்டினார். இப்போது கன்னட ரசிகர்கள் இவரை ‘ஆக்சன் பிரின்ஸ்’ என்று அழைக்கிறார்கள். இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள பான் இந்திய திரைப்படம் ‘கேடி – தி டெவில்’.
இயக்குனர் ‘ஷோமேன்’ பிரேம் இயக்கத்தில் காளி என்ற கதாபாத்திரத்தில் துருவா நடிக்கும் இந்த படத்தை கே.வி.என். புரொடக்சன் தயாரிக்கும் இப்படத்தில் ரீஷ்மா நானையா, ஷில்பா ஷெட்டி, சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ளார்.






