வைரமுத்து எழுதியுள்ள "வள்ளுவர் மறை வைரமுத்து உரை" புத்தகத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வைரமுத்து எழுதியுள்ள "வள்ளுவர் மறை வைரமுத்து உரை" புத்தகத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு


சென்னை,

1980-ம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கன்னத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்றார்.

ஆனால் சமீபகாலமாக அவருக்கு பாடல் வாய்ப்புகள் அதிகமாக வருவதில்லை. அதற்கு வைரமுத்து பாடகி சின்மயியால் மீ டு குற்றச்சாட்டுக்கு ஆளானதும் ஒரு காரணம். இதன் காரணமாக ஏ ஆர் ரகுமான் மற்றும் மணிரத்னம் ஆகியோர் அவரை விட்டுப் பிரிந்தனர். அதனால் அவர் இப்போது இலக்கியம், தனி ஆல்பம் போன்றவற்றில் பிஸியாக இருக்கிறார். இதற்கிடையில் அவர் முகநூலிலும் தீவிரமாக இயங்கி வருகிறார். அடிக்கடி தன்னுடைய மலரும் நினைவுகளை முகநூல் வாயிலாக பகிர்ந்து வருகிறார்.

திருக்குறளுக்கு பரிமேலழகர் முதல் கலைஞர் வரை பலர் உரை எழுதி இருந்தாலும் இன்னும் அதில் எழுதுவதற்கு விஷயம் உள்ளது என்பதால் இந்த புத்தகத்தை எழுத்தியுள்ளதாக தெரிவித்திருந்தார். தான் எழுதியுள்ள ‘திருக்குறள் உரை’ புத்தகத்திற்கு ‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக வீடியோ மூலம் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து ‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ புத்தகம் ஜூலை 13ம் தேதி வெளியாகவுள்ளதாக தனது எக்ஸ் பக்கம் வாயிலாக அறிவித்திருந்தார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, “இன்று உங்கள் அச்சார வாழ்த்துகளோடு அச்சேறுகிறது வள்ளுவர் மறை வைரமுத்து உரை” என்றிருந்தது.

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *