வெளியானது அனுபமாவின் ஹாரர் பட டீசர்…திரைக்கு வருவது எப்போது?|Kishkindhapuri Teaser Out Now

சென்னை,
மலையாள நடிகை அனுபமா நடித்துள்ள தெலுங்கு படமான ‘கிஷ்கிந்தாபுரி’-ன் டீசர் வெளியாகி இருக்கிறது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுபமா. இவர், சமீபத்தில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான ‘டிராகன்’ படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிகாட்டி இருந்தார்.
தற்போது இவர் பிரவீன் கந்த்ரேகுலா இயக்கத்தில் ‘பரதா’ படத்திலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘பைசன்’ படத்திலும் நடித்து வருகிறார். மேலும், கவுசிக் பெகல்லபதி இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமான ‘கிஷ்கிந்தாபுரி’யிலும் நடித்து வருகிறார்.
இப்படத்தில் பெல்லம்கொண்டா சாய் சீனிவாஸ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. அதனுடம் இப்படம் செப்டம்பர் 12-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.