வெளியாக தயாரான ''தம்முடு''வின் இரண்டாவது பாடல்

சென்னை,
நிதினின் ”தம்முடு” படம் அடுத்த மாதம் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஸ்ரீராம் வேணு இயக்கிய இந்தப் படத்தில் ”காந்தாரா” பட நடிகை சப்தமி கவுடா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
இந்நிலையில், ஏற்கனவே இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி வைரலானநிலையில், தற்போது இரண்டாவது பாடலான ஜெய் பகலாமுகி நாளை மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரித்த இந்த படத்தில் லயா, ஸ்வாசிகா, வர்ஷா பொல்லம்மா மற்றும் சவுரப் சச்தேவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்ளில் நடிக்கின்றனர். அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.