வெற்றியின் "சென்னை பைல்ஸ் முதல் பக்கம்" டிரெய்லரை வெளியிட்ட ஆர்யா

வெற்றியின் "சென்னை பைல்ஸ் முதல் பக்கம்" டிரெய்லரை வெளியிட்ட ஆர்யா


சென்னை,

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் வெற்றி. இவரது நடிப்பில் சமீபத்தில் ‘ராஜபுத்திரன்’ படம் வெளியானது. இதில் நடிகர் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து நடிகர் வெற்றி தற்போது ‘சென்னை பைல்ஸ் முதல்பக்கம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை சின்னதம்பி புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குனர் அனீஷ் அஷ்ரப் இயக்கியுள்ளார். இதில் கதாநாயகியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். மேலும், தம்பி ராமய்யா, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

‘சென்னை பைல்ஸ் முதல்பக்கம்’ படம் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்திற்கு ஏ.ஜி.ஆர் இசையமைத்திருக்கிறார். சாண்டி ரவிச்சந்திரன் இணை தயாரிப்பாளராக இருக்கும் இந்த திரைப்படத்தை மீடியா மைண்ட்ஸ் நிறுவனம் வழங்குகிறது. நடிகர் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சென்னை பைல்ஸ் முதல்பக்கம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

இந்நிலையில் ‘சென்னை பைல்ஸ் முதல் பக்கம்’ படத்தின் டிரெய்லரை விஷால் மற்றும் ஆர்யா இணைந்து வெளியிட்டனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *