வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் மனைவிக்கு ரூ.1.10 கோடி நன்கொடை வழங்கிய பிரீத்தி ஜிந்தா |Preity Zinta donates Rs 1.10 crore to help Army widows, children after Op Sindoor

சென்னை,
பிரீத்தி ஜிந்தா, இந்திய ராணுவத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களின் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக ரூ.1.10 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.
கடந்த 24-ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தனது பஞ்சாப் கிங்ஸ் குழுவின் நிறுவன நிதியிலிருந்து இந்த தொகையை வழங்கியுள்ளார். இந்த தொகை சவுத் வெஸ்டர்ன் கமெண்டின் கீழ் செயல்படும் ராணுவ மகளிர் நல சங்கத்திற்கு (AWWA) வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நடிகை பிரீத்தி ஜிந்தா அடுத்ததாக சன்னி தியோலுக்கு ஜோடியாக ‘லாகூர் 1947’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அமீர் கான் தயாரிக்கும் இது, பிரீத்தி ஜிந்தா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் படமாகும்.