விஷ்ணு விஷாலின் மகளுக்கு பெயர்சூட்டிய அமீர்கான்

சென்னை,
நடிகர் விஷ்ணு விஷால் – முன்னாள் பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா தம்பதிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதனை தங்களது சமூக வலைதளங்களில் அவர்கள் பகிர்ந்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று ஐதராபாதில் தனது மகளின் பெயர் சூட்டு விழாவை விஷ்ணு விஷால் கொண்டாடினார் . அப்போது பாலிவுட் நடிகர் அமீர்கான் அந்த குழந்தைக்கு ‘மிரா’ என பெயர் சூட்டியுள்ளார். மிரா என்பதற்கு அளவுகடந்த அன்பு மற்றும் அமைதி என்று பொருள் என விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த செய்தி ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரிதும் வைரலாகி வருகிறது.
வெண்ணிலா கபடி குழு படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். தொடர்ந்து, பலே பாண்டியா, துரோகி, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, ராட்சசன் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.