'விவாகரத்து வதந்திகளால் மிகவும் வேதனையடைந்தேன்' – நடிகர் ஆதி

'விவாகரத்து வதந்திகளால் மிகவும் வேதனையடைந்தேன்' – நடிகர் ஆதி


சென்னை,

சாமி டைரக்டு செய்த ‘மிருகம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகனாக அறிமுகமானவர், ஆதி. இவர். பிரபல தெலுங்கு டைரக்டர் ரவிராஜா பினிசெட்டியின் மகன். ‘ஈரம், அரவான், மரகத நாணயம், கிளாப்’ ஆகிய படங்களில் ஆதி நடித்து இருக்கிறார்.

இவரும், ‘டார்லிங்’ என்ற பேய் படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமான நிக்கி கல்ராணியும் கடந்த 2022-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். சமீபத்தில் இருவரும் பிரிய இருப்பதாக இணையத்தில் வதந்திகள் பரவின. இந்நிலையில், இந்த வதந்தி தன்னை மிகவும் வேதனையடைய செய்ததாக ஆதி கூறி இருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

” நாங்கள் காதலர்களாக மாறுவதற்கு முன்பும், தற்போது கணவன் – மனைவியான பிறகும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். நாங்கள் எங்கள் இதயங்களில் ஒன்றுபட்டுள்ளோம். அப்படி உள்ளநிலையில், இதுபோன்ற வதந்திகள் பரவியது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. மேலும் எனக்கு மிகுந்த வேதனையையும் கொடுத்தது. சில யூடியூப் சேனல்கள் சில ஆதாயத்திற்காக தவறான செய்திகளை பரப்புகின்றன’ என்றார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *