விவசாய நில ஒப்பந்தம் தொடர்பான புகாரில் சிக்கிய நடிகர் ஷாருக்கான் மகள்

மும்பை,
மராட்டியத்தில் விவசாய நில ஒப்பந்தம் தொடர்பான போலீஸ் புகாரில் நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. அலிபாக்கில் ரூ.22 கோடி மதிப்புள்ள இரண்டு நிலங்களை விவசாயத்திற்காக வாங்குவதாக பத்திரப்பதிவின்போது கூறிவிட்டு பண்ணை இல்லம் கட்டியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023 மற்றும் 2024-ம் ஆகிய இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 22 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு நிலப்பகுதிகளை அலிபாக் பகுதியில் அவர் வாங்கியதாகவும், நிலங்கள் தொடர்பான பதிவு ஆவணங்களில், சுஹானா தாம் ஒரு விவசாயி எனக் குறிப்பிடப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
இது குறித்து முழுமையான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சட்டப்படியான விதிமுறைகள் பின்பற்றி நிலம் மாற்றப்பட்டதா ? என்பது குறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது.