விரைவில் இயக்குநராகும் பார்த்திபனின் மகன்!

விரைவில் இயக்குநராகும் பார்த்திபனின் மகன்!


சென்னை,

தமிழ் சினிமாவிற்கு தனது வித்தியாசமான சிந்தனையின் மூலம் திரைப்படத்தை இயக்கி நடித்தும் வருகிறார் பார்த்திபன். பார்த்திபன் நடித்து இயக்கி 1989-ல் வெளியான ‘புதிய பாதை’ படம் பெரிய வெற்றி பெற்றது. பார்த்திபனின் திரையுலக வாழ்க்கையில் முக்கிய படமாகவும் அமைந்தது. இவர் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் பல விருதுகளை பெற்று இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்தது. இவர் இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது. அவர் இயக்கத்தில் வெளியான டீன்ஸ் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது.

தனது மகன் ராக்கி பார்த்திபன், விரைவில் திரில்லர் படம் ஒன்றை இயக்கவுள்ளதாக நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “ராக்கி பார்த்திபன் ! என் மகன் என் உயிருக்கு நிகர். கருப்பு வெள்ளை படங்களிலிருந்து பார்த்து பார்த்து தெளிந்தத் திரை ஞானம், திரு ஏகாவிடம் ஒளிப்பதிவும், இயக்குனர் விஜயிடம் இயக்கமும் கற்று ஒரு கமர்ஷியல் திரில்லர் படத்திற்கான கதை திரைக்கதையை உருவாக்கி இயக்கக் காத்திருக்கிறார் . விரைவில் அறிவிப்பு வர நானும் அவரோடு ஆவலோடு காத்திருக்கிறேன். அப்படத்தில் நடிக்க எனக்கும் ஒரு வாய்ப்பளிப்பதாக வாக்களித்திருக்கிறார். அது என் பிறவிப் பயன். என்னைப் போல அவர் அதிகம் பேச மாட்டார். என்னிமே அளவாய்தான் பேசுவார். வாழ்க்கையை அவர் பார்க்கும் பார்வையும் ரசனையும் சிறப்பானது .அப்பாவை விட என்று இணைத்து எழுதுவதில் பொறாமை கலந்த பெருமை எனக்கு. அவர் வாழ்வில் வெற்றி சூடும் நாளே எனக்கு சிறந்த நாள்” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே நடிகர் விஜயின் மகன் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள நிலையில் தற்போது அந்த லிஸ்ட்டில் பார்த்திபனின் மகனும் விரைவில் இணைய உள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *