விபத்தில் சிக்கிய நடிகர் ஷைன் டாம் சாக்கோ…நடிகை மீரா ஜாஸ்மின் வேண்டுகோள்|Meera Jasmine offers prayers for actor Shine Tom Chacko’s grieving family

சென்னை,
நடிகர் ஷைன்டாம் சாக்கோ நேற்று பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டு, அவரது தந்தை சி.பி. சாக்கோ மரணம் அடைந்தார். நடிகர் ஷைன் டாம் சாக்கோ படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், அவருக்கு ஆதரவு தெரிவித்து நடிகை மீரா ஜாஸ்மின் வெளியிட்டுள்ள பதிவில், ”துக்கம் என்பது மிகவும் உண்மையான விஷயம். இது போன்ற சூழ்நிலைகளில் கருணை முக்கியமானது. நாம் கருணையுடன் இருக்க வேண்டும். ஷைன் டாம் சாக்கோவின் குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்கிறேன்” இவ்வாறு தெரிவித்திருக்கிறார்
தமிழில் ரன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமான மீரா ஜாஸ்மின் தொடர்ந்து சண்டக்கோழி, ஆயுத எழுத்து, ஆஞ்சநேயா, திருமகன், நேபாளி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். மலையாளத்திலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.
திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்த இவர் 9 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் நடித்திருந்த ‘டெஸ்ட்’ படத்தில் நடித்திருந்தார்.