வித்தியாசமான முறையில் ரிலீஸ் தேதியை வெளியிட்ட “பேட்ரியாட்” படக்குழு

வித்தியாசமான முறையில் ரிலீஸ் தேதியை வெளியிட்ட  “பேட்ரியாட்” படக்குழு


மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களான மோகன்லால் மற்றும் மம்முட்டி இணைந்து ‘பேட்ரியாட்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் இவர்கள் இணைந்து நடிக்கும் 8வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தினை ‘டேக் ஆப்’, ‘மாலிக்’ போன்ற படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்குகிறார்.

இதில் குஞ்சாக்கோ போபன், பகத் பாசில், நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆண்டோ ஜோசப் மற்றும் கே.ஜி.அனில் குமார் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் சுஷின் ஸ்யாம் இசையமைத்துள்ளார் . சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. முழுக்க ஆக்‌ஷன் படமாக இது அமைந்திருப்பது டீசர் மூலம் தெரியவருகிறது.

130 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்தது. மம்முட்டியும் மோகன்லாலும் ஒன்றாக இணைந்து நடித்திருப்பதால் இந்த படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

நயன்தாரா, மம்முட்டி , பகத் பாசில் கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் ‘பேட்ரியாட்’ படம் உருவாகியுள்ளது.இந்த போஸ்டர்களில் மோர்ஸ் கோடில் ஏப்ரல் 23 என குறிப்பு வைத்து வித்தியாசமான முறையில் ரிலீஸ் தேதியை ‘பேட்ரியாட்’ படக்குழு வெளியிட்டுள்ளனர்

இந்நிலையில், ‘பேட்ரியாட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 10 மணிக்கு வெளியாக உள்ளதாக மம்முட்டி அறிவித்துள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *