'விடாமுயற்சி' படத்தின் 'பத்திக்கிச்சி' பாடல் வெளியானது

'விடாமுயற்சி' படத்தின் 'பத்திக்கிச்சி' பாடல் வெளியானது


சென்னை,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துள்ளார். மகிழ்த்திருமேனி இயக்கிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான ‘சவதீகா’ மற்றும் டிரெய்லர் வெளியாகி வைரலாகின. இதனையடுத்து, ‘விடாமுயற்சி’ படத்தின் 2வது பாடல் இன்று காலை 10.45 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, ‘பத்திக்கிச்சி’ என்ற பாடல் தற்போது வெளியாகி உள்ளது.

ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் அடுத்த மாதம் 6ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *