விஜய் பிறந்தநாள் – நயன்தாராவின் பதிவு வைரல்

சென்னை,
இன்று தனது 51வது பிறந்தநாளைக் கொண்டாடும் விஜய்க்கு நடிகை நயன்தாரா வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி 9 அன்று வெளியாகவுள்ள அவரது ஜன நாயகன் படத்திற்கும் வாழ்த்து கூறி இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”அன்புள்ள விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வரவிருக்கும் ஆண்டு சிறப்பாக அமையட்டும். ஜனநாயகனுக்கு வாழ்த்துகள்” இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
விஜய் மற்றும் நயன்தாரா தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான திரை ஜோடி. பல வெற்றி படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
அவர்கள் முதன் முதலில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான சிவகாசி படத்தில் திரையைப் பகிர்ந்து கொண்டனர், அதில், நயன்தாரா சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். பின்னர் பிரபு தேவா இயக்கிய வில்லு (2009) படத்தில் பணியாற்றினர். கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு, அட்லீ இயக்கிய பிகில் (2019) படத்தில் நடித்தனர். இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.