விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ரகசிய நிச்சயதார்த்தம்?|Vijay Deverakonda & Rashmika Mandanna engaged?

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ரகசிய நிச்சயதார்த்தம்?|Vijay Deverakonda & Rashmika Mandanna engaged?


சென்னை,

விஜய் தேவரகொண்டாவும் , ராஷ்மிகா மந்தனாவும் காதலிப்பதாக நீண்ட காலமாக வதந்தி பரவி வருகிறது . இருப்பினும் , இருவரும் தங்கள் உறவு குறித்து அதிகாரபூர்வமாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை . ‘ கீதா கோவிந்தம் ‘ மற்றும் ‘ டியர் காம்ரேட் ‘ படங்கள் மூலம் அவர்களுக்கு இடையே உருவான நட்பு காலப்போக்கில் காதலாக மாறியுள்ளதாக திரைப்பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

இந்நிலையில், இந்த ஜோடி சமீபத்தில் தங்கள் காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது . வெள்ளிக்கிழமை ( அக்டோபர் 3) காலை விஜய் தேவரகொண்டாவின் வீட்டில் அவர்களின் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது . குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சில நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அதில் கலந்துகொண்டதாக தெரிகிறது.

விஜய்-ரஷ்மிகா திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன . பல ஆண்டுகளாக எதிர்பார்த்திருந்த இந்த செய்தி வெளியானதை அடுத்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் .


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *