’விஜய் தேவரகொண்டாவின் உண்மையான திறமையை பார்ப்பீர்கள்’: ’விடி14’ பட இயக்குனர் |Vijay Deverakonda’s true potential will be unleashed: Rahul Sankrityan

சென்னை,
விஜய் தேவரகொண்டா தற்போது பிரிட்டிஷ் காலத்தில் நடக்கும் ஒரு வரலாற்றுப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை முன்னதாக “சடுகுடு வண்டி” மற்றும் “ஷ்யாம் சிங்க ராய்” போன்ற படங்களை இயக்கிய ராகுல் சங்க்ரித்யன் இயக்குகிறார்.
சமீபத்தில் ஒரு திரைப்பட நிகழ்வில் பேசிய ராகுல் சங்க்ரித்யன் , “விடி14-ல்(VD14) விஜய் தேவரகொண்டாவின் நடிப்பைப் பார்க்கும்போது, நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள். அவரது உண்மையான நடிப்புத் திறமையை நீங்கள் காண்பீர்கள்” என்று கூறினார்.
பிரிட்டிஷ் காலப் பின்னணியில் அமைக்கப்பட்ட விடி14 திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது.