விஜய் சேதுபதி நடித்த "முத்து என்கிற காட்டான்" வெப்தொடர்

விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் தலைவன் தலைவி திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை பாண்டிராஜ் இயக்க நித்யா மேனன் மற்றும் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இத்திரைப்படம் முதல் 6 நாள்களில் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் விஜய் சேதுபதி அடுத்ததாக முத்து என்கிற காட்டான் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இத்தொடரை மணிகண்டன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் காக்கா முட்டை மற்றும் கடைசி விவாசாயி போன்ற மாபெரும் படைப்பை உருவாக்கிய இயக்குநர் ஆவார். இத்தொடரை விஜய் சேதுபதி தயாரித்துள்ளார்.
இத்தொடரில் விஜய் சேதுபதி மற்றும் ஜாக்கி ஷெராப் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்தொடர் விரைவில் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.