விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அப்டேட்

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் பூரி ஜெகநாத். இவர் கடந்த 2000ம் ஆண்டில் பவன் கல்யாண் நடிப்பில் பத்ரி திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். அதை தொடர்ந்து மகேஷ் பாபு நடிப்பில் போக்கிரி திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்று படத்தை பல மொழிகளில் ரீமேக் செய்தனர். இதற்கிடையில், பிசினஸ்மேன், டெம்பர், லிகர், டபுள் இஸ்மார்ட் உள்ளிட்ட படங்களை இயக்கிய பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். தற்காலிகமாக ஸ்லம்டாக் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பூரி ஜெகநாத் மற்றும் சார்மி கவுர் இணைந்து தயாரிக்கின்றனர்.
படத்தில் விஜய் சேதுபதியுடன் தபு,சம்யுக்தா, துனியா விஜய், நிவேதா தாமஸ், மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில், இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளதைத் தயாரிப்பு நிறுவனம் புகைப்படங்கள் வெளியிட்டு அறிவித்துள்ளன.இதில், சண்டைக்காட்சிகள் மற்றும் முக்கியமான காட்சிகள் எடுக்கப்பட்ட உள்ளதாகக் கூறப்படுகிறது.