விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் பிரபல நடிகை

விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் பிரபல நடிகை



சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் விடுதலை 2 படத்தை தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் ‘டிரெயின்’ படத்திலும், ஆறுமுக குமார் இயக்கத்தில் ‘ஏஸ்’ படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

அதனை தொடர்ந்து, “பிசினஸ்மேன், டெம்பர், லிகர், டபுள் இஸ்மார்ட்” உள்ளிட்ட படங்களை இயக்கிய பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். பான் இந்தியா அளவில் தயாராக உள்ள இப்படத்தை நடிகை சார்மி கவுர் தயாரிக்க உள்ளார். இப்படத்தில் நடிகை தபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். ஜூன் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தில் பிரபல நடிகையான ராதிகா ஆப்தே, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பை படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை ராதிகா ஆப்தே ‘ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *