விஜய் ஆண்டனியின் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான சாப்ட்வேர் என்ஜினீயர்

சென்னை,
அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் இன்று வெளியான படம் சக்தி திருமகன். படத்தில் மகாராஷ்டிராவை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் திருப்தி ரவிந்திரா கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார். இது குறித்து நடிகை திருப்தி கூறியதாவது:-
நான் நன்கு நடிப்பு பயிற்சி எடுத்த களம் தியேட்டர் நாடகம் தான். தற்போது ‘சக்தி திருமகன்’ படத்தில் இயக்குநர் அருண் பிரபு, விஜய் ஆண்டனி சார் மற்றும் படக்குழுவினருடன் பணிபுரிந்ததும் இந்தப் படம் மூலம் அறிமுகமாவதும் என் வாழ்வின் பெருமையான தருணம். படம் மூலம் நிறைய கற்றுக் கொண்டேன். தமிழ் கலாச்சாரத்தை மதிக்கும் விதமாகவும் ரசிகர்களுடன் இன்னும் நெருக்கமாகவும் தமிழ் மொழி கற்றுக் கொண்டிருக்கிறேன்.
ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான கதாபாத்திரங்கள் மற்றும் படங்களை கொடுக்கும் திறமையான இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.