விஜய்யை தொடர்ந்து அஜித்துக்கு வில்லனாக நடிக்கும் இயக்குநர் மிஷ்கின்?, Will Mysskin be the director who will play the villain for Ajith after Vijay?,

விஜய்யை தொடர்ந்து அஜித்துக்கு வில்லனாக நடிக்கும் இயக்குநர் மிஷ்கின்?, Will Mysskin be the director who will play the villain for Ajith after Vijay?,


‘குட் பேட் அக்லி’ படத்துக்கு பிறகு அஜித்குமார் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. இதில் ஸ்ரீலீலா, சுவாசிகா என 2 கதாநாயகிகள் நடிக்க இருப்பதாகவும், அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.

இதற்கிடையில் இந்த புதிய படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கப்போகும் பிரபலம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, தனித்துவமான நடிப்பில் கலக்கி வரும் இயக்குநர் மிஷ்கின் வில்லன் வேடத்தில் நடிக்கப்போவதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

முன்னணி இயக்குனரான மிஷ்கின், சமீபகாலமாக படங்களில் தனது நடிப்பால் அசத்தி வருகிறார். லியோ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து கவனம் ஈர்த்தார். தற்போது அஜித்குமாருக்கு அவர் வில்லனாக நடிக்க இருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *