விஜய்யின் “ஜனநாயகன்” படத்துடன் மோதப்போவது யார்?

விஜய்யின் “ஜனநாயகன்” படத்துடன்  மோதப்போவது யார்?


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். தீவிர அரசியலில் களமிறங்கி இருக்கும் விஜய் நடிக்கும் கடைசி படம் இதுதான் என்று கூறப்படுகிறது. இதனால் படத்துக்கு சினிமா தாண்டி அரசியல் களத்திலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கமான விஜய் படம் போன்று இல்லாமல், இந்த படத்தில் அரசியல் நெடி அதிகம் இருப்பதாக தெரிய வந்துள்ளது. படத்தில் பஞ்ச் வசனங்களுக்கும் குறைவில்லையாம். அதேபோல விஜய்யின் கட்சி மற்றும் கட்சிக்கொடி பற்றிய சில காட்சிகளும் சேர்க்கப்பட்டிருக்கிறதாம். விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் மற்றும் பாசில் ஜோசப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருகிறதாக கூறப்படுகிறது. இதில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் இலங்கையில் நடைபெற்று நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு பணிகள் பொள்ளாச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் பொங்கல் பண்டிகையில் ‘ஜனநாயகன்’ படத்துடன் ‘பராசக்தி’ மோத உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். ‘ஜனநாயகன்’ படத்துடன் ‘பராசக்தி’ மோதுகிறதா என்று சுதா கொங்கராவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த இயக்குனர் “இதுகுறித்து எனக்கு தெரியாது. அதை தயாரிப்பாளர் தான் சொல்ல வேண்டும்” என்றார்.

மேலும் சூர்யாவின் ‘கருப்பு’ படம் திரைக்கு வரவுள்ளது. ‘கருப்பு’ படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.‘ஜனநாயகன்’ படத்துடன் மோதுவது ‘பராசக்தி’ படமா ‘கருப்பு’ படமா என்பது விரைவில் தெரியவரும்.

‘பராசக்தி’மற்றும் ‘கருப்பு’ படங்களில் ஓ.டி.டி ஒப்பந்தம் முதலில் கையெழுத்தாகும் திரைப்படமே பொங்கலுக்கு ‘ஜனநாயகன்’ படத்துடன் ரிலீஸாகும் என தெரிகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *