விக்ரம் பிரபு நடிக்கும் “சிறை” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் விக்ரம் பிரபு, அக்ஷய் ஆகியோர் நடிக்கும் ‘சிறை’ படத்தை சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ளார். . இதன் கதையினை ‘டாணாக்காரன்’ தமிழ் எழுதியுள்ளார். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. முழுமையாக படப்பிடிப்பு முடிந்து, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம். விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, நாயகியாக அனந்தா நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் அக்ஷய் குமார் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு சென்னை, வேலூர், சிவகங்கை ஆகிய பகுதிகளில் நடைபெற்றுள்ளது. தற்போது இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், விக்ரம் பிரபு நடிக்கும் ‘சிறை’ திரைப்படம் வரும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.விரைவில் இசை மற்றும் டிரெய்லர் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.