விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்

சென்னை,
96 பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 64வது படத்தில் நடிக்கவுள்ளார். இதனை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். சில வாரங்களாக இந்த படத்திற்கான நடிகர், நடிகை தேர்வு நடைபெற்று வருகிறது. தற்போது இதில் கதாநாயகியாக நடிக்க ருக்மணி வசந்த் இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
கன்னட சினிமாவின் பிரபலமான நடிகையாக இருப்பவர் ருக்மணி வசந்த். இவர் தற்போது தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார். ருக்மணி வசந்த் தமிழில் விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தில் நடித்திருந்தார். விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த அப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதையடுத்து விக்ரம் படத்தில் இணைந்துள்ளார். தொடர்ந்து முன்னனி நடிகர்களின் நடித்து கவனம் பெறுகிறார் ருக்மணி வசந்த்.