விக்கி கவுசலுக்கு தெலுங்கு சொல்லி கொடுத்த ராஷ்மிகா மந்தனா

ஐதராபாத்,
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. இவர் புஷ்பா 2 படத்தின் வெற்றிக்கு பிறகு பாலிவுட் ‘சாவா’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜி – சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.
இதில் விக்கி கவுசல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாக நடித்துள்ளார். ராஷ்மிகா சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 14ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் முதல் பாடலான ‘ஜானே டு’ கடந்த 1-ம் தேதி வெளியானது. ஐதராபாத்தில் இப்பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், விக்கி கவுசல் ராஷ்மிகா மந்தனாவின் உதவியுடன் தெலுங்கில் பேசினார். விக்கியின் பேச்சு ரசிகர்களை உற்சாகமடைய செய்தது.