”வாழ்க்கையை உணர விரும்பினால்”…இந்த படத்தை பாருங்கள் – நயன்தாரா |”If you want to feel life”…watch this film

சென்னை,
இயக்குனர் ராமின் சமீபத்திய நகைச்சுவை படமான பறந்து போவிற்கு நடிகை நயன்தாரா பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள பதிவில்,
“இந்த பரபரப்பான உலகத்தை விட்டு விலகி உண்மையான வாழ்க்கை என்னவென்று உணர விரும்பினால், குழந்தைகளை கூட்டிக்கொண்டு மலை ஏறுங்கள்.. அல்லது ஏரியில் அவர்களுடன் நீந்தி விளையாடுங்கள்.. அல்லது அவர்களை ராம் சாரின் ”பறந்து போ” படத்திற்கு அழைத்துச் சென்று காணுங்கள்.
வாழ்க்கையில் நமக்கு என்ன தேவை , எதை இழக்கிறோம் என்பதை இந்த படம் அழகாக எடுத்துரைக்கிறது. நான் பார்த்த மிக இனிமையான படங்களில் இதுவும் ஒன்று. ராம் சார் நீங்கள் பெஸ்ட் இயக்குனர். சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி என ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.