‘‘வாழ்க்கையில் நிறைய அடி வாங்கிட்டேன்” – நடிகர் சிம்பு | “I’ve taken a lot of beatings in my life”

‘‘வாழ்க்கையில் நிறைய அடி வாங்கிட்டேன்” – நடிகர் சிம்பு | “I’ve taken a lot of beatings in my life”


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு, தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அரசன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டைட்டில் டீசர் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது.

இந்த படத்துக்காக புதிய ஹேர் ஸ்டைலில் சுற்றிக்கொண்டிருக்கும் சிம்பு, நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு தெரிவித்த கருத்துகள் வைரலாகி வருகிறது.

அதில், ‘‘எங்கே சென்றாலும் எப்போது திருமணம்? என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். திருமணம் நடக்கும்போது நடக்கும். தனியாக இருப்பதோ அல்லது குடும்பமாக இருப்பதோ ஒரு மேட்டரே கிடையாது. நாம் ஒழுங்காக, நிம்மதியாக இருக்கோமா? என்பது தான் முக்கியம். சந்தோஷமான மனதுடன் இருந்தாலே போதும். நாலு பேரை நிம்மதியாக பார்த்துக்கொள்ள முடிந்தாலே போதும். என்னடா தத்துவம் பேசுறானே… என்று நினைக்க வேண்டாம். வாழ்க்கையில் ரொம்ப அடிவாங்கி இருக்கேன். அதனால் தான் இப்படி பேசுகிறேன்” என்றார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *