’வாழ்க்கையில் நான் பயப்பட்ட 2 விஷயங்கள்’

சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் மாதவன், தமிழ் சினிமா மட்டுமில்லாமல் பாலிவுட் சினிமாவிலும் களமிறங்கி கலக்கி வருகிறார். அதன்படி, சமீபத்தில் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான ‘சைத்தான்’ படத்தில் மாதவன் நடித்திருந்தார்.
இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அடுத்ததாக பாலிவுட்டில், அனன்யா பாண்டே, அக்சய் குமார் நடிக்கும் படத்திலும் மாதவன் நடித்து வருகிறார். இப்படம் வரும் மார்ச் மாதம் 14-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், வாழ்க்கையில் தான் பயப்பட்ட 2 விஷங்கள் பற்றி மாதவன் பேசி இருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில்,
‘ என் கெரியரில் நான் 2 விஷயங்களுக்கு பயப்பட்டிருக்கிறேன். ஒன்று, முதல் நாள் படப்பிடிப்பில் ஈடுபடும்போது, இரண்டாவது, படத்தின் ரிலீஸ் நாள். 25 ஆண்டுகள் சினிமாவில் இருப்பது என்பது எளிதானது அல்ல. மக்களின் ஊக்கம்தான் என்னைதொடர்ந்து பயணிக்க வைத்திருக்கிறது. அவர்கள் இல்லை என்றால் நான் என்றோ காணாமல் போயிருப்பேன்’ என்றார்.