’வார் 2’ பட தோல்வி…மவுனம் கலைத்த ஹிருத்திக் ரோஷன்

சென்னை,
யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் ஆதித்யா சோப்ரா தயாரித்து அயன் முகர்ஜி இயக்கிய வார் 2 படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியானது. ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர், கியாரா அத்வானி நடித்த இந்த படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறியது.
பாக்ஸ் ஆபீஸில் பெரும் தோல்வியை சந்த்தித்தது. இந்நிலையில், இது குறித்து ஹிருத்திக் ரோஷன் சில கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வார் 2′ படத்திற்காக அயன் முகர்ஜி மிகவும் கடினமாக உழைத்தார். அவரைப் பார்த்து, நானும் மிகவும் உற்சாகமாக இருந்தேன். ஒரு நடிகராக, நாம் நமது பொறுப்பை 100 சதவீதம் நிறைவேற்ற வேண்டும். ரிசல்ட் எதுவாக இருந்தாலும், அதை சீரியஸாக எடுக்காமல், எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
எல்லாப் படங்களும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன்தான் நாம் அதை செய்கிறோம். ஆனால், ரிசல்ட் பார்வையாளர்களால் வழங்கப்படுகிறது. அனைத்தையும் நல்லதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்,” என்று தெரிவித்திருக்கிறார்.