’வாய்ப்பு கிடைத்தால் அவர்களுடன் நடிக்க விரும்புகிறேன்’ – நடிகை தன்யா |’I would love to act with them if I get the chance’

சென்னை,
ஏழாம் அறிவு, காதலில் சொதப்புவது எப்படி, ராஜா ராணி உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை தன்யா பாலகிருஷ்ணா. மேலும் இவர் தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், அவர் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது, ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு அவர் சுவாரசியமான பதில்களை அளித்தார். அந்த பதில்கள் இப்போது வைரலாகி வருகின்றன.
அதன்படி, சூர்யா , பவன் கல்யாண் மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோர் தனக்கு பிடித்த நடிகர்கள் என்றும், வாய்ப்பு கிடைத்தால் அவர்களுடன் நடிக்க விரும்புவதாகவும் கூறினார். இவர் ஏற்கனவே ஏழாம் அறிவு படத்தில் சூர்யாவுடன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தன்யா தற்போது நடித்திருக்கும் படம் கிருஷ்ண லீலா. தேவன் இயக்கி நடித்திருக்கும் இப்படம் வருகிற நவம்பர் 7-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் வினோத் குமார், பிரித்வி (பெல்வி), ரலி காலே, துளசி, 7 ஆர்ட் சரயு, ஆனந்த் பரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். பீம்ஸ் சிசரோலியோ இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.






