'வல்லான்' படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வெளியீடு!

'வல்லான்' படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வெளியீடு!


சென்னை,

‘கட்டப்பாவை காணோம்’ என்ற படத்தை இயக்கிய மணி செய்யோன் இயக்கியுள்ள திரைப்படம் ‘வல்லான்’. இந்த படத்தில் சுந்தர் சி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் தன்யா ஹோப், சாந்தினி தமிழரசன், அபிராமி வெங்கடாசலம் உள்பட பலர் நடிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசை அமைத்துள்ளார்.

விஆர் டெல்லா பிலிம் பேக்டரி சார்பாக வி.ஆர்.மணிகண்டராமன் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் சுந்தர் சி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ஒரு கொலைக்கான காரணத்தை பல்வேறு கோணத்தில் கண்டுபிடிக்க முயற்சி செய்வதை, விறுவிறுப்பான கதைக்களத்துடன் திரில்லர் ஜர்னரில் இப்படம் உருவாகியுள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டே ரிலீஸுக்கு தயாரான இப்படம் ஒரு சில காரணத்தால் வெளியாகவில்லை. இந்த நிலையில் இப்படம் நாளை வெளியாக உள்ளது. சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் 12 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு வெளியான ‘மதகஜராஜா’ படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இந்த படமும் 2 ஆண்டுகள் கழித்து திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் படத்துக்கு ‘யு/ஏ’ தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

View this post on Instagram

A post shared by V R Della Film Factory (@vrdellafilmfactory)

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *