வயதான நபரால் பாலியல் துன்புறுத்தல்…நினைவு கூர்ந்த ஆயிஷா கான்|Ayesha Khan recalls horrible sexual harassment experience by an elderly man

சென்னை,
திரைப்படத் துறையில் காஸ்டிங் கவுச் பெரும் விவாதப்பொருளாக உள்ளது. பல கதாநாயகிகள் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் சில சமயங்களில் ஹீரோக்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக துணிச்சலாகத் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில், ஒரு கதாநாயகி தனக்கு நடந்த ஒரு கசப்பான அனுபவத்தை பகிர்ந்தார். தனது தந்தையை விட வயது அதிகமான ஒருவர் தனது அந்தரங்க உறுப்புகளைப் பற்றி மோசமாகப் பேசியதாகக் கூறி அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அவர் வேறுயாறுமல்ல ஆயிஷா கான்தான்.
ஒரு நேர்காணலில் அவர் கூறுகையில், ’இளம் வயதில் நான் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்திருந்தேன். அப்போது எனது தந்தையை விட வயதான ஒருவர் ஸ்கூட்டரை என் அருகில் வந்து நிறுத்தினார். நான் தெரிந்தவராக இருப்பார் என்று, சொல்லுங்கள் என்றேன். அப்போது அந்த நபர் எனது மார்பகங்களை பற்றி தவறாக பேசினார். அது என்னை மிகவும் அதிர்ச்சியடைய வைத்தது’என்றார்.